
வரும் 15 ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தனித்து போட்டியிடும் என்று அம்னோ துணை தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் இன்று திட்டவட்டமாக அறிவித்தார். தற்போது தேசிய முன்னணி கூட்டணியில் அம்னோ மஇகா, மசீச மற்றும் சரவாக் ஜிபிஎஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தேசிய முன்னணி வலுப்பெற்று வருகிறது. அந்த வகையில் வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்து போட்டியிடும் என்று அவர் உறுதியாக குறிப்பிட்டார். மேலும் தேசிய முன்னணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வியும் எழவில்லை என்று அவர் சொன்னார்.
