
கெடா மாநிலத்தில் பல தமிழ்ப்பள்ளிகள் மூடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் வேளையில் அந்த பள்ளிகளை காப்பாற்றும் முயற்சியில் கெடா கெஅடிலான் தலைவர்கள் களம் இறங்கி உள்ளனர். பாலிங் மாவட்ட முன்னாள் கவுன்சிலர் சந்துரு, சுங்கை பட்டாணி சேர்ந்த சமூக ஆர்வாளர் திரு.ர.விஜயன், கெஅடிலான் கட்சியை சேர்ந்த பூபாலன், லோகநாதன் மற்றும் சமூக ஆர்வாளர் மாரிமுத்து ஆகியோர் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். கெடா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் நிலையை அறிந்து அதனை காப்பற்ற வேண்டியது நமது கடமைகளில் ஒன்றாகும். உடனடியாக ஒரு குழு ஒன்றை அமைத்து அதன் வழியாக அந்தந்த பள்ளிகளின் நிர்வாகத்துடன் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்ய உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். முதல் கட்டமாக பாட்டனி பாரா தமிழ்ப்பள்ளியை அருகாமையில் உள்ள சுங்கை லாலாங் பகுதிக்கு மாற்ற முயற்சி செய்யலாம். பாடாங் சொரய் நாடளுமன்ற உறுப்பினர் எம். கருப்பயா மற்றும் புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்ல போவதாக அவர்கள் தெரிவித்தனர்..
