
கிள்ளான், சிப்பாங் மாவட்டம் உட்பட பல இடங்களில் வெள்ளத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர் களத்தில் இறங்கி உதவினர். இரு தினங்களாக பெய்துக் கொண்டிருக்கும் அடைமழையால் கிள்ளான் மற்றும் வட்டாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, செந்தோசா சட்டமன்ற

உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ் உட்பட சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேருதவி புரிந்தனர். சிலாங்கூர் மாநில அரசு போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு உதவி வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடைகள், கனிமநீர், போர்வைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிப்பாங் உட்பட பல இடங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சிலாங்கூர் மாநில அரசு உதவி வருகிறது. இதனிடையே குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் சிக்கிக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்ற விரைவு படகுகளை விரைந்து அனுப்பி வைக்கும் படி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

