
தேசிய முன்னணியை 30 ஆண்டுகளாக ஆதரித்து வரும் ஐபிஎப் கட்சியின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். ஐபிஎப் கட்சிக்கு செய்யவேண்டியதை எல்லாம் நாங்கள் கண்டிப்பாக செய்வோம். கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் இனிமேல் படிப்படியாக நிறைவேற்றப்படும். அதற்கான நேரம் வந்து விட்டது என்று அவர் சொன்னார். நான் ஒவ்வொரு முறையும் ஐபிஎப் கட்சியின் மாநாட்டைத் தொடக்கி வைத்து வாக்குறுதியை வழங்கி இருக்கிறேன். சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதற்கான காரணத்தையும் அவர்களிடம் விளக்கி இருக்கிறேன். ஆனால் இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது என்று நேற்று ஐபிஎப் கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்த போது குறிப்பிட்டார். வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மீண்டும் தேசிய முன்னணி ஆட்சியை அமைக்கும் நேரத்தில் ஐபிஎப் கட்சிக்கு அனைத்தும் செய்து தரப்படும் என்று அவர் சொன்னார். ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 300 க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

