33.9 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பத்து தொகுதி மக்களுக்கு மாண்புமிகு பிரபாகரன் உதவிகள் வழங்கினார்

நாட்டில் பெய்த அடைமழையால் கோலாலம்பூரில் உள்ள பத்து தொகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்து தொகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் வி பிரபாகரன் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்பட்டன. உணவு மற்றும் இதர பொருட்கள் வவங்தப்பட்ட வேளையில் பத்து தொகுதி கெஅடிலான் சார்பில் அவர்களின் வீடுகளும் சுத்தம் செய்யப்படுகிறது. இவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்ததும் சேதம் அடைந்தத பொருட்களுக்கு பதிலாக புதிய பொருட்கள் வாங்கி தரப்படும் என்று பிரபாகரன் தெரிவித்தார். தக்க நேரத்தில் எங்களுக்கு இரண்டு நாட்களாக உதவிகள் வழங்கிய பிரபாகரனுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles