
மூன்று தினங்களாக பெய்த மழையால் சிலாங்கூர் மாநில மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான் மற்றும் சிப்பாங் மாவட்டம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஷா ஆலம், பத்து தீகா, ஸ்ரீ மூடா, செந்தோசா, காப்பார், பண்டமாரான் ஆகிய இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். வரலாறு காணாத அடைமழையால் சிலாங்கூர்மாநில மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவும் வகையில் பினாங்கு மாநில பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குமரேசன் மற்றும் பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸி சிம் ஆகியோர் நிவாரண நிதியை தொடக்கி உள்ளனர். நிவாரண நிதி மூலம் சிலாங்கூர் மாநில மக்களுக்கு விரைவில் உதவிகள் வழங்கப்படும் என்று மாண்புமிகு குமரேசன் தெரிவித்தார்.
