
மோசமான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடா, ஐச் சுற்றியுள்ள மக்களை வெளியேற்ற உதவுவதற்காக எட்டு க படகுகள் பயன்படுத்தப் பட்டதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். ஷா ஆலம் நகராண்மைக் கழக ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வெள்ளம் சூழ்ந்ததுள்ள பகுதிகளில் நுழைய சிரமப்படுவதால் இந்த படகுகள் பயன்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார். மோசமான வெள்ளத்தில் சிக்கித் தவித்த 300 தாமன் ஸ்ரீ முடா குடியிருப்பாளர்கள் மீட்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
