
அமைச்சர் ஸூரைடா கமாரூடின் தலைமையில் நேற்று புதிய அரசியல் கட்சி அறிவிக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. Parti Bangsa Malaysia என்றழைக்கப்படும் இந்த புதிய அரசியல் கட்சி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த அறிவிப்பு செய்யப்படவில்லை. தேசிய சமூக நடவடிக்கை இயக்கத்தில் உறுப்பியம் பெற்றுள்ள 53,000 பேர் இந்த புதிய அரசியல் கட்சியில் இணைந்திருக்கிறார்கள் என்று மட்டுமே கூறப்பட்டது. அமைச்சர் ஸூரைடா கமாரூடின் தலைமையில் இந்த புதிய அரசியல் கட்சிக்கு கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி பதிவு இலாகா அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது. கெஅடிலான் கட்சியில் இருந்து விலகிய ஜொகூர் தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் மற்றும் சரவாக் ஜூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் லேரி சிங் ஆகியோர் இந்த கட்சியில் இணையும் முக்கியத் தலைவர்கள் ஆவார்.
