
தடுப்பூசி விவகாரத்தில் பினாங்கு மாநில அரசுக்கு எதிராக அரசியல் விளையாட்டை அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் டாக்டர் ராமசாமி கேட்டுக்கொண்டார்.
மற்ற மாநிலங்கள் தடுப்பூசியை வாங்கிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் பினாங்கு மாநிலத்திற்கு இதுவரை எந்த அனுமதியும் கிடைக்கவில்லை.
பினாங்கு மாநில மக்களை ஓரம் கட்ட வேண்டிய அவசியம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார். நாட்டில் நோய்தொற்று நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
ஆகவே பினாங்கு மாநில அரசுக்கு எதிராக அரசியல் விளையாட்டை கைரி ஜமாலுடின் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.



