27.6 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

ஐ.நா. கூட்டத்தில் இஷாமுடின் பங்கேற்கவில்லை! சாடினார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

🔥 Views : 11
👁 Reading Now : 31

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நடைபெற்று வரும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளது.
இந்த கூட்டத்தில் மலேசியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஷாமுடின் கலந்து கொள்ளவில்லை. தற்போது நியூயார்க் நகரில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய சார்பில் வெளியூர் அமைச்சர் கலந்து கொள்ளவில்லை என்றால் மலேசிய தனது பிரதிநிதியை அனுப்பி இருக்க வேண்டும் என்று கெஅடிலான் தேசியத்தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறினார்.
இது ஒரு முக்கியமான கூட்டம். இதில் மலேசியா பங்கேற்று இருக்கவேண்டும். இஷாமுடின் கலந்து கொள்ளாதது குறித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.
இது தொடர்பில் இஷாமுடின் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles