26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

சிலாங்கூர் மாநில பாதுகாப்பு மன்றத்திற்கு யார் தலைவர்? லிம் கிட் சியாங் கேள்வி

சிலாங்கூர் மாநில பாதுகாப்பு மன்றத்திற்கு யார் தலைவர் என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அல்லது அம்னோவை சேர்ந்த டத்தோஸ்ரீ நோர் ஒமார் சிலாங்கூர் மாநில பாதுகாப்பு மன்றத்திற்கு தலைவரா என்பதை பிரதமர் தெளிவாக அளிவிக்க வேண்டும். சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற உடனடியாக அரசாங்க நிறுவனங்கள் முன் வரவில்லை. பொதுமக்களும் பொது இயக்கங்கள் மற்றும் சிலாங்கூர் மாநில அரசு பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றினார். டத்தோஸ்ரீ நோர் ஒமார் இன்னமும் சிலாங்கூர் மாநில பாதுகாப்பு மன்றத் தலைவராக நீடிப்பது பல கேள்விகளை எழுப்பி வைப்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டிருப்பதை லிம் கிட் சியாங் இன்று சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles