
மோசமான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வீடு, கார் மற்றும் தனிப்பட்ட கடனை திரும்ப செலுத்துவதை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கும் சலுகையை அரசாங்கம் அறிவித்துள்ளது. வெள்ளத்தினால் சேதமுற்ற தளவாட பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு பிஎஸ்என் வங்கியில் வட்டியில்லா 5,000 வெள்ளி கடனை பெறுவதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிறுதொழில் முனைவோருக்கு உதவ தெக்குன் நேசனல் திட்டத்தின் கீழ் 3 கோடி வலி ஒதுக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்தார்.
