29 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்து 2,064 டன் குப்பைகள் அள்ளப்பட்டுள்ளன

சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான வீடுகள் இன்னமும் மிதந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்து வரும் வீடுகளில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல தன்னார்வலர்கள் களம் இறங்கி வீடுகளை சுத்தம் செய்து கொண்டிருக்கும் வேலையில் இதுவரை 2,064 டன் மெட்ரிக் குப்பைகள் அள்ளப் பட்டிருப்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இவர்களின் கண்ணீரை துடைக்க சிலாங்கூர் மாநில அரசு போராடி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles