
நாட்டை உலுக்கிய வெள்ளப் பேரிடர் பகாங் மாநிலத்தையும் விட்டு வைக்கவில்லை. பகாங்கில் இதுவரை வெள்ளத்திற்கு பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பகாங் மெந்தகாப் மற்றும் காராக் பகுதி இன்னமும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல அடி உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள். காராக்கில் ஏறிய வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. நிம்மதி இழந்து துயரக்கடலில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் உட்பட அரசியல் கட்சிகள் பொது இயக்கங்கள் தொடர்ந்து உதவி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
