
வெள்ளம் பாதித்த பகுதிகளில் காணப்படும் குடியேற்ற முறை மற்றும் அடர்த்தியான மக்கள் தொகை ஆகியவை தாமான் ஸ்ரீ மூடாவில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார். குடியேற்றத்தின் முறை மற்றும் மக்கள் தொகை அடர்த்தியின் காரணமாக கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் வெள்ளம் ஏற்படும் பகுதிகளைக் காட்டிலும் இப்பகுதி முற்றிலும் வேறுபட்டது என்று அவர் சொன்னார் கிளந்தான், பகாங் மற்றும் திரெங்கானுவுடன் ஒப்பிடும்போது இங்கு மக்கள் அடர்த்தியான சூழலில் வரிசை வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்றனர் என்று அவர் சொன்னார்.
