
கடந்த வாரத்தில் இடைவிடாது பெய்த மழையால் ஷா ஆலமில் உள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் ஏறியதால் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள். தாமான் ஸ்ரீ முடாவில் ஏறிய வெள்ளம் வடிந்து கொண்டிருக்கிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்களும் உதவி புரிந்து வருகிறார்கள் என்று அவர் சொன்னார்
