
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கோலசிலாங்கூர் மக்கள் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் நேரில் வருகை புரிந்து மக்களை சந்தித்தார். இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். மதகு உடைந்து நீர் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த காரணத்தால் 681 பேர் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். அணையை மீண்டும் நிர்மாணிக்கும் பணியில் குத்தகையாளர் ஈடுபட்டு வருவதோடு நீரை இயந்திரம் மூலம் இறைக்கும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
