25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

கட்சியின் பதிவு கேள்விக்குறியாக இருக்கும் வேளையில் மை பிபிபி கட்சிக்கு டான்ஸ்ரீ கேவியஸ் தலைவரா?

🔥 Views : 6
👁 Reading Now : 29

கட்சியின் பதிவு கேள்விக்குறியாக உள்ளது. இந நிலையில் டான்ஸ்ரீ கேவியஸ் எப்படி மைபிபிபியின் தலைவர் ஆவார் என்று டத்தோஸ்ரீ மெக்லின் கேள்வியை எழுப்பியுள்ளார். மைபிபிபி கட்சியின் பதிவு விவகாரம் சங்கப் பதிவகத்தில் இன்னும் முடிவு பெறாதப் பிரச்சனையாக உள்ளது. நானே மைபிபிபி தலைவர் என டான்ஸ்ரீ கேவியஸ் எப்படி அறிவிக்க முடியும் என அவர் கேள்வியை எழுப்பியுள்ளார். கட்சியில் ஏற்பட்ட உட்பூசல் பெரிய அளவு வெடித்ததில் கட்சியில் பதிவு ரத்தாகும் நிலைக்குப் போனது. கட்சியின் பதிவை உறுதிப்படுத்த சங்கப் பதிவகம் விதிமுறையுடன் கூடிய வாய்ப்பினை வழங்கி உள்ளது. 2014 – 2019 ஆண்டுக்கான செயலவையை அங்கீகரித்ததோடு. அதற்குப் பிறகு புதிய செயலவையைத் தேர்தெடுக்க வேண்டும். மூன்றாம் தரப்பினரை நியமித்துஸ கட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கேட்டுக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles