27.6 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

அரசியல் வேறுபாடுகளை களைந்து மக்களுக்கு உதவ வாருங்கள்! சிலாங்கூர் மந்திரி பெசார் அழைப்பு

🔥 Views : 8
👁 Reading Now : 62

சிலாங்கூர் மாநில பேரிடர் பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்கு நேற்று சிலாங்கூர் மந்திரி புசார் தலைமையேற்றார். வெள்ளப் பேரிடர் தொடர்பில் அனைத்து அரசு துறைகளின் கருத்தையும் பெறுவதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டதாக அவர் சொன்னார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்பரவுப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் மாநில எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் உட்பட போலீஸ், சுகாதார இலாகா, சமூக நல இலாகா அதிகாரிகளும் கலந்து கொண்டனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அனைத்து தரப்பினரும் அரசியல் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைய வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles