29.9 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

தைப்பூசத்திற்கான எஸ்ஒபி விதிமுறைகள்! புத்ராஜெயாவின் அனுமதிக்காக காத்திருக்கிறது

🔥 Views : 7
👁 Reading Now : 35

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு வரும் ஜனவரி 18 ஆம் தேதி தைப்பூச திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு , ரத ஊர்வலம், காவடி , பால் குடம் ஏந்துவது தொடர்பில் அரசாங்கம் எஸ்ஓபி விதிமுறைகளை பரிந்துரைத்துள்ளது. தற்காப்பு – சுகாதார அமைச்சுகளின் அனுமதியைப் பெறுவதற்கு முன்பாக , அந்த பரிந்துரைகள் ஆலயங்களுக்கும் இந்து சங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த பரிந்துரைகளில், 10 க்கும் குறைவான இடங்களில் ரதம் நிற்பதோடு ,சுமார் 500 பக்தர்கள் ரத ஊர்வலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 16 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதி வரை காவடிகளை ஏந்தி செல்ல அனுமதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 14 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதி வரை ஒரு நேரத்தில் 50 பேர் வரை பால் குடம் ஏந்தி வர அனுமதியளிப்பது இதில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பத்துமலை, பினாங்கு, ஈப்போ, ஜொகூர் பாரு உட்பட அனைத்து கோயில்களில் தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles