24.7 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

அடுத்தாண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை கள்ளக் குடியேறிகளுக்கு பொது மன்னிப்பு

அடுத்தாண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை நாட்டில் தங்கியிருக்கும் கள்ள குடியேறிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக குடிநுழைவு துறை தலைமை இயக்குனர் டத்தோ கைரூல் தெரிவித்தார் . ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருக்கும் கள்ள குடியேறிகளுக்கு பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் அவர்கள் நாடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு லட்சத்து 92,281 கள்ளக் குடியேறிகள் தாயகம் திரும்புவதற்கு தங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் 23,844 பேர் இந்திய பிரஜைகள், 26,821 வங்காளதேசிகள் மற்றும் 99,047 பேர் இந்தோனேசியர்கள் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles