28.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

உலுலங்காட் கெஅடிலான் தலைவர் இராஜன் தலைமையில் வெள்ளத்தில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் வீடுகளை சுத்தம் செய்யப்பட்டன

🔥 Views : 9
👁 Reading Now : 35

நாட்டில் பெய்த அடைமழையால் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் உலுலங்காட் பகுதியும் ஒன்றாகும். காஜாங் 12 ஆவது மைலில் தாமான் ஸ்ரீ நண்டிங்கில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் வெள்ளத்தில் அனைத்து பொருட்களையும் இழந்த பரிதவிக்கிறது. இந்நிலையில் உலுலங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் இராஜன் முனுசாமி, காஜாங் கவுன்சிலர் ராமச்சந்திரன், உலுலங்காட் கெஅடிலான் இளைஞர் பகுதி துணைத் தலைவர் விஷ்ணு, சிலாங்கூர் சிலம்பம் கோர்வை மற்றும் கெஅடிலான் உறுப்பினர்கள் ஒன்றிணைத்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியதோடு வீடுகளையும் சுத்தம் செய்தனர். உலு லங்காட் வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தில் அனைத்து பொருட்களையும் இழந்துள்ளனர். இங்குள்ள மக்களுக்கு தளவாடங்கள் உட்பட துணிமணிகளும் தேவைப்படுவதால் பொதுமக்கள் உதவிக்கரம் நீட்டும்படி இராஜன் முனுசாமி கேட்டுக் கொண்டார். பல நல்ல உள்ளங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருவதை பெரிதும் வரவேற்கிறோம். அந்த வகையில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாமான் நண்டிங்ஸ் மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டும் படி அவர் கேட்டுக் கொண்டார். காஜாங, செமினி, பெர்னாங் வட்டாரத்தைச் சேர்ந்த மக்களும் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles