25.3 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பி.டி.பி.டி.என். கடனை செலுத்துவதை 3 மாதம் ஒத்தி வைக்க அரசாங்கம் அனுமதி

🔥 Views : 6
👁 Reading Now : 57

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பி.டி.பி.டி.என். எனப்படும் தேசிய உயர்கல்விக் கடனுதவிக் கழக கடனை செலுத்துவதை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. மலேசிய குடும்ப உணர்வுக்கேற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னி தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உடமைகளை இழந்தவர்கள் மீது அரசாங்கம் அனுதாபமும் அவர்கள் நலனில் அக்கறையும் கொண்டுள்ளதை புலப்படுத்தும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார். கடனைத் திரும்ப செலுத்துவதை ஒத்தி வைப்பது தொடர்பான விண்ணப்பதை கடன் பெற்றவர்கள் டிசம்பர் 28 ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles