25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மாரியம்மன் கோவிலில் இருந்து வெள்ளி ரதம் புறப்படும்போது ஆயிரம் பேர் மட்டுமே செல்ல அனுமதி

🔥 Views : 7
👁 Reading Now : 29

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு வரும் ஜனவரி 18 ஆம் தேதி தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு ஒற்றுமை துறை அமைச்சுடன் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் புரிந்துணர்வு அடிப்படையில் எஸ்ஓபி விதிமுறைகளுக்கு இணக்கம் கண்டிருப்பதாக தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார். ஜனவரி 16ஆம் தேதி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து வெள்ளி ரதம் புறப்படும்போது ஆயிரம் பேர் மட்டுமே உடன் செல்ல பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 10 இடங்களில் வெள்ளி ரதம் நிற்பதற்கும் அர்ச்சனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. வெள்ளி ரதத்தில் பால்குடம் ஏந்தி செல்பவர்கள் முன்கூட்டியே பத்துமலை ஆலய நிர்வாகத்துடன் பதிந்து கொள்ள வேண்டும். ரத ஊர்வலம் என்னடி கீதம் உறுமி மேளம் மற்றும் கோலாட்டத்திற்கு அனுமதி இல்லை. பக்தர்கள் ஆற்றங்கரையில் குளிக்க அனுமதி வழங்கப்படும். ஒரே நேரத்தில் படிக்கட்டுகளில் 50 பேர் மட்டுமே பால்குடம் ஏந்தி செல்ல முடியும். இம்முறை தைப்பூசத்தில் அன்னதானம் செய்ய அனுமதி இல்லை. ஆலய நிர்வாகத்துடன் பதிவு செய்துகொண்ட குறிப்பிட்ட கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் முடி காணிக்கை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles