24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

வெள்ளப் பேரிடர் தொடர்பில் சிலாங்கூர் அரசுக்கு எதிராக பிரதமர் கெட்ட நோக்கம் கொண்டிருந்தாரா?

🔥 Views : 7
👁 Reading Now : 54

வெள்ளப் பேரிடர் சம்பவத்தில் சிலாங்கூர் மாநில அரசுக்கு எதிராக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கெட்ட நோக்கம் கொண்டிருந்தாரா என்று உலுகிளாங் சட்டமன்ற உறுப்பினர் சாரி சுங்கிப் கேள்வியை எழுப்பியுள்ளார். வெள்ளப் பேரிடர் தொடர்பில் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறோம் என்று நினைத்தால் பிரதமருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர் தெரிவித்தார். டிசம்பர் 17 ஆம் தேதி நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் சிலாங்கூர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற ராணுவத்தை அனுப்பி வைக்கும்படி பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸாமுடினை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் டிசம்பர் 19 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு பிரதமர் மற்றும் தற்காப்பு அமைச்சரை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடர்பு கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. ஆகவே வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாக கருதினால் பிரதமருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க லாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles