28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வருமான வரி செலுத்துவதை ஒத்திவைக்க அனுமதி

🔥 Views : 6
👁 Reading Now : 56

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் வருமான வரியை செலுத்துவதை ஒத்தி வைக்க உள்நாட்டு வருமான வரி வாரியம் கருணை அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது. வருமான வரியை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு டிசம்பர் மாதத்திலிருந்து ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருமான வரி வாரியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. அதே சமயம், ஜனவரி மாதத்திற்கான விசாரணை, தணிக்கை, வசூலிப்பு, சிவில் வழக்கு தொடர்பான கட்டணங்களை பிப்ரவரி மாதம் வரை ஒத்தி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும்,டிசம்பர் மாதத்திற்கான தொழிலாளர்களின் மாதாந்திர வரித் தொகையை ஜனவரி 31 ஆம் தேதி வரை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles