
நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஷா ஆலம் தாமான் ஸ்ரீ முடா, கிள்ளான், செந்தோசா மற்றும் உலுலங்காட் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தற்போது சுத்தம் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெள்ளம் புரட்டிப் போட்ட உலுலங்காட் பகுதிகள் சுத்தப்படுத்தும் பணி மிகவும் தீவிரம் அடைந்திருப்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
