27.9 C
Kuala Lumpur
Sunday, June 21, 2026

Vetri

எம்ஏசிசி தலைவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நாடாளுமன்றம் விசாரிக்க வேண்டும்!

🔥 Views : 7
👁 Reading Now : 50

பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் எம்ஏசிசி தலைமை ஆணையர் அசம் பாக்கி சம்பந்தப்பட்ட சுமார் 20 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பங்குகள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணை குழு மற்றும் ஒரு தேர்வுக் குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று கெஅடிலான் எம்பிக்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. பொருளாதார நிபுணர் எட்மண்ட் டெரன்ஸ் கோம்ஸ் எம்ஏசிசியின் ஆலோசனை மற்றும் ஊழல் தடுப்புக் குழுவில் இருந்து ஆசாம் பக்கி மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க தவறியதால் அவர் பதவி விலகினார். ஆகவே அசம் பாக்கியை நாடாளுமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சிவராசா, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின், பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் டி ஜின், பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரிம், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்சில் மற்றும் லெடாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் இப்ராகிம் ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles