28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

மூடா கட்சிக்கு ஆர்எஸ்எஸ் அங்கீகாரம் கிடைத்தது

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் தலைமையிலான மூடா கட்சிக்கு அதிகாரபூர்வமான அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒரு அரசியல் கட்சியாக மூடா அங்கிகரிக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் சைட் சாடிக் இன்று அறிவித்தார். கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி மூடா கட்சி அதிகாரப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மூடா கட்சியில் 60,000 உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றுள்ளனர். இப்போது ஒரு அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதால் மூடா கட்சியில் இணைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று அவர் சொன்னார். இப்போது மூடா கட்சியின் கவனம் எல்லாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதுதான் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles