27.9 C
Kuala Lumpur
Sunday, June 21, 2026

Vetri

தாய்மொழி பள்ளிகளை அழிக்க நினைப்பவர்கள் காணாமல் போவார்கள்! டாக்டர் இராமசாமி ஆவேசம்

🔥 Views : 8
👁 Reading Now : 31

மலேசிய நாட்டில் தாய் மொழி பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பானது தாய்மொழி பள்ளிகளை அழிக்க நினைப்பவர்களுக்கு ஒரு சரியான படமாகும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி சுட்டிக்காட்டினார். நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஏற்பவே தமிழ் மற்றும் சில பள்ளிகள் செயல்படுவதாகவும் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே தாய்மொழி பள்ளிக்கு எதிராக இனி யாரும் கேள்வி எழுப்ப முடியாது. மேலும் தாய்மொழிப் பள்ளிகளை அழிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு படமாகும். மேலும் இவர்களும் காணாமல் போவார்கள் . இந்நாட்டில் தாய்மொழி பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles