
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் உதவித் தொகையாக ஆயிரம் வெள்ளி உதவித்தொகை வழங்கி வருகிறது. அதேசமயம் வெள்ளத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு பத்தாயிரம் வெள்ளி வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆயிரம் வெள்ளி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் உதவித்தொகை பெறுவதற்கான பூர்த்தி செய்த மனுப்பாராங்களை சமர்ப்பிக்க கிள்ளான் மாவட்ட அலுவலகத்தை நோக்கி படையெடுத்தனர். காலையிலேயே அதிகமான மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



