24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு பிள்ளைகள் துணிந்து தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புங்கள்

🔥 Views : 7
👁 Reading Now : 31

தாய்மொழி பள்ளிகளை அகற்றி விடலாம் என்று யாரும் கனவுகள் காண வேண்டாம். மலேசிய திருநாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று மலேசிய தமிழர் சங்கத்தின் தேசியத் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான எம்.ஜே. கணேசன் தெரிவித்தார். மலேசிய நாட்டில் தாய் மொழி பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பானது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாகும். நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஏற்பவே தமிழ் மற்றும் சில பள்ளிகள் செயல்படுவதாகவும் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை மலேசிய தமிழர் சங்கம் பெரிதும் வரவேற்கிறது. இந்நாட்டில் உள்ள தமிழர்கள் துணிந்து தங்களது பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles