
அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கோவிட் பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது. பிரான்சில் இதுவரை இல்லாத அளவாக நேற்று மட்டும் 2 லட்சம் பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. கடந்த டிச.,22 முதல் உலகளவில் தினமும் 9 லட்சம் பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட் அதிகரித்து வருகிறது. பிரான்சில் நேற்று முன்தினம் ,1 லட்சத்து 80,000 பேருக்கு கோவிட் உறுதியான நிலையில், நேற்று 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு உறுதியாகி உள்ளது. இது குறித்து கவலை தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஆலிவர் வெரன், ஒவ்வொரு நொடிக்கும் 2 பேருக்கு தொற்று உறுதியாகிறது. மருத்துவமனைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. வெளியில் வரும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். ஒமிக்ரோன் பரவலை அலை எனக்கூறுவதை விட ஆழிப்பேரலையாக உள்ளது என்று அவர் சொன்னார்.
