
டெல்டா மற்றும் ஒமிக்ரோன் வகைகள் இணைந்து இரட்டை அச்சுறுத்தல்களாக மாறியுள்ளதாகவும், இவை கொரோனா பாதிப்பின் சுனாமியை ஏற்படுத்துவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் ஒமிக்ரோன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா வைரஸ் தொற்றால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதைவிட அதிகளவு பரவும் ஒமிக்ரோன் வைரஸ் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கூறுகையில் டெல்டா மற்றும் ஒமிக்ரோன் கொரோனா வகைகள் இணைந்து இரட்டை அச்சுறுத்தல்களாக மாறியுள்ளன. இது புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது என்று தெரிவித்தார்
