
ஜொகூர், பகாங், திரங்கானு, கிளந்தான் ஆகிய நான்கு மாநிலங்கள் வெள்ளம் ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை முழு தயார் நிலையில் உள்ளது. மொத்தம் 2,817 தீயணைப்பு வீரர்கள், 628 உதவி தீயணைப்பு வீரர்கள், 2,080 தன்னார்வலர் தீயணைப்பாளர்களை உள்ளடக்கிய 5,525 பேர் தயார் நிலையில் உள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரிசால் மரைக்கான் நைனா மரைக்கான் தெரிவித்தார் தீயணைப்பு வீரர்கள், சாதனங்கள் மற்றும் தளவாடங்கள் உள்பட அனைத்து நிலையிலும் முன்னேற்பாடாக இருக்கும்படி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் சொன்னார்.
