33.9 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 வெள்ளியில் மின்சாரப் பொருட்கள் விநியோகம்

எரிசக்தி திறன் நிலையான அடைவுநிலை திட்டத்தின் கீழ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மின்சாரப் பொருட்களை வாங்குவதற்கு 500 வெள்ளி கழிவு வழங்கப்படும். வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படுவதாக எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் தெரிவித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வளாகங்கள் அல்லது இ-காமர்ஸ் எனப்படும் மின்-வணிகத் தளங்களில் மின்சாரப் பொருட்களை வாங்குவதற்காக 500 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles