
உலு லங்காட் மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்பரவு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உலு லங்காட் விளங்குவதாக கூறிய மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அதனை அடுத்து ஸ்ரீ மூடா மற்றும் சுபாங் ஜெயாவின் புக்கிட் லஞ்சோங் ஆகிய பகுதிகள் உள்ளன என்றார். அதிகப்பட்ச சேதம் மற்றும் அடர்த்தியான மக்கள் தொகையின் அடிப்படையில் உலு லங்காட் மாவட்டத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
