34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

நாட்டில் வெள்ளம் ஏற்படும் 272 இடங்களை தீயணைப்பு இலாகா அடையாளம் கண்டுள்ளது

நாடு முழுவதிலும் வெள்ளம் ஏற்படக்கூடிய 272 இடங்களை தீயணைப்பு படை மற்றும் மீட்புத்துறை அடையாளம் கண்டுள்ளது. ஆறுகள், கடற்கரைகள், நீர் வீழ்ச்சிகள், கால்வாய்கள் ஆகியவவையும் இவற்றில் அடங்கும் என தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ முகமட் ஹம்டான் தெரிவித்தார். கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து வெள்ளம் ஏற்படும் பகுதிகள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டது. ஆனால் சிலாங்கூரில் 9 மாவட்டங்களில் டிசம்பர் 18 முதல் 20 ஆம் தேதிவரை வழக்கத்திற்கு மாறாக மழை அதிகமாக பெய்ததால் தீயணைப்புத் துறையின் தேடும் மற்றும் மீட்கும் குழுக்கள் சில கட்டுப்பாடுகளை எதிர்நோக்கியதாக அவர் தெரிவித்தார். சிலாங்கூரில் ஒரே இரவில் வெள்ள நீரோட்டம் விரைவாக அதிகரித்ததால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை என்று அவர் சொன்னார். வெள்ளத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் அவர்களை வெளியேற்றுவதில் மனித ஆற்றல் பற்றாக்குறையும் எங்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles