26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

இலங்கையில் உணவுப் பஞ்சம் தாறுமாறான விலையேற்றம்

🔥 Views : 8
👁 Reading Now : 27

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவும் உணவுப் பஞ்சமும் பொருட்களின் தாறுமாறான விலையஎற்றமும் அந்த நாட்டு ஏழை-நடுத்தர மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. இதன் தொடர்பில் அண்மையில் கருத்து தெரிவித்த அந்நாட்டு அமைச்சர் ஒருவர் வீடுகளிலேயே காய்கறி வளர்த்துக் கொள்ளுங்கள் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். மரவள்ளிக் கிழங்கு – சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. காய்கறிகளின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் அன்றாடம் பருகும் தேநீர் விலையும் உணவகங்களில் உயர்ந்துள்ளது. ஏழை மக்களுக்கோ அரை வயிற்று கஞ்சிதான் கிடைக்கிறது என்று தேயிலைத் தோட்ட பாட்டாளி திருமதி மாரியம்மா தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles