
நடப்பு பருவத்தின் லா லிகா கால் பந்தாட்டத் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கெதாஃபே அணி அதிரடி படைத்துள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே எனெஸ் உனல் வெற்றிக் கோலை அடித்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத ரியல் மாட்ரிட் அணியால் கடைசி வரை கோல் ஏதும் அடிக்க முடியாத நிலையில் 1-0 என்னும் கணக்கில் கெதாஃபே அணி வெற்றிக் கொடி நாட்டியது. ஆனாலும், 20 ஆட்டங்களின்வழி 46 புள்ளிகளைப் பெற்றுள்ள ரியல் மாட்ரிட் அணிதான் புள்ளிப் பட்டியலில் இன்னமும் உச்சத்தில் இருக்கிறது. இருந்தாலும், முந்தைய பாதுகாப்பான நிலையில் இருந்து ரியல் மாட்ரிட் சற்று சரிந்துள்ளது.
