24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

கடல் அலைகள் உயரும் கடற்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

🔥 Views : 8
👁 Reading Now : 64

கோலாலம்பூர், ஜன.03: ஜனவரி 5-ஆம் நாள் வரை நாட்டின் கடற்கரைகளில், குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் மேற்குக்கரைப் பகுதிகளில் கடல் மட்டம் உயர்வதுடன் கடல் அலைகளும் உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கெடா மாநிலத்தின் கோல மூடா, பேராக்கில் பாகான் டத்தோ, சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான், கோல லங்காட், சபா பெர்ணம், கோல சிலாங்கூர், ஜோகூரின் பத்து பகாட், பொந்தியான் ஆகியப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்கும்படி நீர்ப்பாசன-வடிகால் துறையின் கடலோர நிருவாகப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது. கடல் அலைகளின் உயரம் கடந்த காலத்தைவிட குறைவாக இருந்தாலும் கடற்பெருக்கத்தால் வெள்ளத்திற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் பொது மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கம்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles