29 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

தீயணைப்பு-மீட்புப் படையினருக்கு சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் சிறப்பு

🔥 Views : 33
👁 Reading Now : 53

அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீ அண்டலாஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 10 வீரர்களின் குடும்பங்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் ஜார்ஜ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு செய்தார். இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக களம் இறங்கிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பின் காரணமாக அதே வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சொந்த வீட்டையும் உடைமைகளையும் காப்பாற்ற முடியாமல் போனது. செந்தோசா பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்களின் நலனிலும் அக்கறைக் கொள்வது ஒரு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பு என்னும் வகையில் டாக்டர் ஜி.குணராஜ் நேரில் சந்தித்து அவர்களின் சேவையைப் பாராட்டினார். செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவை மையத்தின் சார்பில் உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles