
சபா மாநிலத்தில் குறைந்தது ஐந்து மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சபாவில் உள்ள மக்கள், குறிப்பாக வெள்ளம் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிப்பவர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர், பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 14 தற்காலிக வெளியேற்ற மையங்களை மாநில பேரிடர் மேலாண்மை குழு செயல்படுத்தியுள்ளதாகவும் அவர் சொன்னார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுமாறு பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
