
மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட ஷா ஆலம் இடங்களில் இதுவரை 25,000 டன் குப்பைகள் அள்ளப்பட்டுள்ளன என்று சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் ஷா ஆலம் வட்டாரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டன. இதனால் வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளன. வீட்டில் வெளியே குவிக்கப்பட்ட குப்பைகள் அகற்றும் பணி பல தினங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஷா ஆலம் வட்டாரத்தில் இதுவரை 25,000 டன் குப்பைகள் அள்ளப்பட்டுள்ளன என்று சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் அறிவித்துள்ளது.
