34.6 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர்க் கட்டண விலக்கு ‘AIR SELANGOR’ அறிவிப்பு

🔥 Views : 6
👁 Reading Now : 31

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2022 ஜனவரி மாத கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பதாக சிலாங்கூர் மாநில தண்ணீர் பராமரிப்பு நிறுவனமான ‘அயர் சிலாங்கூர்’ அறிவித்துள்ளது. கம்போங் பாசிர், ஜலான் பத்து பாத்தா, ஜலான் ரஹ்மாட், ஜலான் ராஜா சோழன், கம்போங் ச்சுபாடாக், கம்போங் டெலிமா, கம்போங் காசிப்பிள்ளை, கம்போங் கொளம் அயர், லோரோங் ஜம்பு லாவுட், லோரோங் ராஜா மஹாடி போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த மாதத்திற்கு தண்ணீர்க் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் பயனீட்டாளர்கள் எந்த விண்ணப்பமும் செய்ய வேண்டியதில்லை என்று அறிவித்துள்ள அயர் சிலாங்கூர் நிறுவனம், வழக்கம்போல ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர்க் கட்டணத்திற்கான ரசீது அனுப்பப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles