33.9 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

அண்டை வீட்டு முன் நிர்வாணமாக நடந்த ஆடவருக்கு மூன்று மாதச்சிறை!

🔥 Views : 6
👁 Reading Now : 68

அண்டை வீட்டுப் பெண்ணின் வீட்டின் முன் நிர்வாணமாக நடந்து பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அப்பெண்ணைக் கொன்று விடுவதாக மிரட்டிய தொழிலாளி ஒருவருக்கு நேற்று 3 மாதச்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட இவருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி இரவு 8.40 மணியளவில் கோம்பாக்கில் உள்ள பத்து ஆராங்கில் வீட்டின் முன் 36 வயதுப் பெண்ணைக் கொலை மிரட்டல் விடுத்ததாக ஆடவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் குடிபோதையில் இருந்ததாகவும், என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளவில்லை என்றும், மேலும் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவரின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles