
முன்னாள் சட்டத் துறைத் தலைவர் தோமி தோமஸ் அண்மையில் வெளியீடு செய்த பு ‘மை ஸ்டோரி: ஜஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ்’ என்னும் நூலில் குறிப்பிடப்பட்ட சில கூற்றுகள் தொடர்பில் விசாரிக்க அமைக்கப்பட்ட பணிக்குழுவுடன் ஒத்துழைக்க தோமி தோமஸ் மறுத்து வருகிரார் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் சாடியுள்ளார். நீதிபதிகளை நியமித்தல், நீதித்துறை கட்டமைப்பில் அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவின் அதிகப்படியான தலையீடு, வழக்குகளைத் தேர்ந்தெடுத்து நடத்துதல் போன்ற அம்சங்கள் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுடன் தான் ஒத்துழைக்கப் போவதில்லை என்று பணிக்குழுவின் தலைவர் ஃபோங் ஜூ சுங்கிற்கு தோமி தோமஸ் கடிதம் எழுதியுள்ளதன் தொடர்பில்தான் நஜிப் விமர்சனம் செய்துள்ளார்.
