
நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு தேசிய அளவில் தணிந்து வருவதால் பகாங், மலாக்கா, சபா, நெகிரி செம்பிலான் ஆகிய நான்கு மாநிலங்களில் பாதுகாப்பு கருதி தற்காலிக முகாம்களில் தங்கியிருந்தோர் எண்ணிக்கை சன்னமாக குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகாங் மாநிலத்தில் நேற்றைய முன்னிரவு நிலவரப்படி 933 பேர் 27 மையங்களில் தங்கி இருந்தனர்; மாலை நிலவரப்படி 29 மையங்களில் 954 பேர் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக மழையும் குறைந்து, எல்லா ஆறுகளிலும் வெள்ள நீர் வடிய ஆரம்பித்துள்ளதால் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்திருந்த வெள்ள நீரும் குறைந்து வருவதை பரவலாகக் காண முடிவதாக பகாங் பேரிடர் மேலாண்மை வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


