27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

அன்றாட கோவிட்-19 தொற்று 30 ஆயிரத்தை எட்டக்கூடும் -கைரி எச்சரிக்கை!

🔥 Views : 6
👁 Reading Now : 63

ஒமிக்ரோன் பரவல் குறித்து போதிய எச்சரிக்கை செலுத்தாவிட்டால், அன்றாட கோவிட்-19 தொற்று 30,000 வரை எட்டலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் எச்சரித்துள்ளார். உம்ரா பயணத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும். சுகாதார அமைச்சக அவதானத்தின் அடிப்படையில் உம்ரா பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, கட்டாய தனிமைப்படுத்துதல் பொன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படா-விட்டால், கொரோனா நச்சுயிரியின் அன்றாட தொற்று பிப்ரவரி மாதத்திற்குள் 15,000 என்ற அளவில் அதிகரிக்கக்கூடும். கிருமி தொற்றியவர்கள், அதிலிருந்து மீண்டவர்கள் உள்ளிட்ட தரவுகளின் (SEIR) அடிப்படையில் சுகாதார அமைச்சு இந்த எண்ணிக்கை அவதானித்துள்ளது என்றும் நேற்றைய செய்தியாளர்க் கூட்டத்தில் கைரி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles