
மத்திய அரசின் “பந்துவான் வாங் இசான்“ எனப்படும் வெள்ள உதவி நிதிக்கு விண்ணப்பம் செய்துள்ள 49,394 குடும்பங்களில் 79.5 விழுக்காடு அல்லது 39,255 குடும்பங்கள் நேற்று வரை 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். இந்த உதவித் திட்டத்திற்கு இன்னும் பதிந்து கொள்ளாதவர்கள் பேரிடர் நடவடிக்கை கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அலுவலக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.


